11 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.918.6 கோடி காணிக்கை

11 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.918.6 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு பொறுப்பேற்றதில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து இந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதம் 16-ந்தேதி வரை 11 மாதங்களில் மொத்தம் ரூ.918.6 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக எஸ்.வி. அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.338.8 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.252.83 கோடி, ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப் பிரசாதினி திட்டத்துக்கு ரூ.97.97 கோடி, எஸ்.வி. பிராணதான அறக்கட்டளைக்கு ரூ.66.53 கோடி, எஸ்.வி. கோசம்ரக்ஷன அறக்கட்டளைக்கு ரூ.56.77 கோடி, எஸ்.வி. கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.33.47 கோடி, பெர்டு மருத்துவமனைக்கு ரூ.30.02 கோடி, எஸ்.வி. சர்வ ஸ்ரேயாஸ் அறக்கட்டளைக்கு ரூ.20.46 கோடி, எஸ்.வி. வேதப் பரிரக் ஷன அறக்கட்டளைக்கு ரூ.13.87 கோடி,
எஸ்.வி.பி.சி. பக்தி சேனல் அறக்கட்டளைக்கு ரூ.6.29 கோடி, சுவிம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1.52 கோடி கிடைத்துள்ளது. அதில் நேரில் வழங்கியதை விட ஆன்லைன் வழியாக அதிகமான பக்தர்கள் காணிக்கைகளை வழங்கி உள்ளனர். அதில் ஆன்லைன் வழியாக ரூ.579.38 கோடி, நேரில் (ஆப்லைன்) வழியாக ரூ.339.20 கோடி கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






