சபரிமலை ஐயப்பன் வழிநடை சரணங்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் பாட வேண்டிய சரணம் இது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களின் வழிநடை பயணத்தின்போது, ஐயப்ப சுவாமியை போற்றி பாடும் சரண கோஷங்களை உச்சரித்தபடி செல்வார்கள். இவ்வாறு வழிநடைப் பயணத்தின்போது, பக்தர்கள் பாடும் சரணத்தை பார்ப்போம்.
ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.
சுவாமியே ஐயப்போ - ஐயப்போ சுவாமியே
பகவானே பகவதியே - பகவதியே பகவானே
தேவனே தேவியே - தேவியே தேவனே
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பகவான் சரணம் - பகவதி சரணம்
பகவதி சரணம் - பகவான் சரணம்
தேவன் சரணம் - தேவி சரணம்
தேவி சரணம் - தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு - சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா - தேக பலம்தா
தேக பலம்தா - பாத பலம்தா
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா - தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா -ஏற்றி விடப்பா
ஏற்றி விடப்பா - தூக்கி விடப்பா
சாமி பாதம் - ஐயன் பாதம்
ஐயன் பாதம் - சாமி பாதம்
யாரைக்காண - சாமியை காண
சாமியை கண்டால் - மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதி - சுவாமிக்கே
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
முத்திரைத் தேங்காய் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் சாமிக்கே - வெற்றிலை அடக்கம் சாமிக்கே
கதலிப்பழம் சாமிக்கே - விபூதி அபிஷேகம் சாமிக்கே
கட்டுக்கட்டு - இருமுடிக்கட்டு
யாரோட கட்டு - சாமியோட கட்டு
சாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சாமிமாரே
பம்பா வாசா - பந்தள ராஜா
பந்தள ராஜா - பம்பா வாசா
சாமி அப்பா ஐயப்பா - சரணம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா - வந்தோம் அப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா - பம்பா வாசா ஐயப்பா
கரிமலை வாசா ஐயப்பா - கலியுக வரதா ஐயப்பா.






