சுசீந்திரம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது


சுசீந்திரம்:  ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது
x

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருகின்ற 19-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டு தயார் செய்யப்படுகிறது. இதற்கான பணி இன்று கோவிலில் தொடங்கியது. கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருக்கோவில் தலைமை அலுவலகப் பணியாளர் செல்வி ஆகியோர் லட்டு தயாரிக்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.

பறக்கையை சேர்ந்த பத்மநாபன் போர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 1.5 டன் கடலை மாவு, 4 டன் சீனி, 150 டின் எண்ணெய், 100 கிலோ முந்திரி பருப்பு, 20 கிலோ ஏலக்காய், 15 கிலோ கிராம்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

1 More update

Next Story