பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட போலந்து - மெக்சிகோவுடன் 'டிரா' செய்தது


பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட போலந்து - மெக்சிகோவுடன் டிரா செய்தது
x

போலந்து - மெக்சிகோ இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு சி பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ அணி, போலந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் விழவில்லை. பிற்பாதியில் போலந்து கோல் அடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் ராபர்ட் லெவன்டோஸ்கி கோட்டை விட்டார்.

அதாவது 57-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அவரது பனியனை மெக்சிகோ வீரர் ஹெக்டர் மோரனோ பிடித்து இழுத்தார். இதனால் அவர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானதுடன் போலந்துக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார்.

ஆனால் பெனால்டியில் லெவன்டோஸ்கி உதைத்த பந்தை மெக்சிகோ கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் பாய்ந்து விழுந்து தடுத்தார். இதனால் போலந்து ரசிகர்கள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதன் பிறகு இரு அணியினரும் கோல் போட எடுத்த முயற்சி கைகூடவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.


Next Story