ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து; 6 பேர் பலி

இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர்.
ஷேக்புரா - சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






