கணவர் இறந்த துக்கத்தில்.. பெண் எடுத்த விபரீத முடிவு.. பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 2 குழந்தைகள்


கணவர் இறந்த துக்கத்தில்.. பெண் எடுத்த விபரீத முடிவு.. பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 2 குழந்தைகள்
x

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மாதநாயக்கனஹள்ளி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகா தொட்டகுட்டதஹள்ளியில் உள்ள சாய்ராமா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா (வயது 31). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுபாக்யாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் சவுபாக்யா மனமுடைந்து காணப்பட்டார்.

யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். சிறு, சிறு வேலைகள் பார்த்து குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனாலும் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சவுபாக்யா, நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் சவுபாக்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெற்றோரை இழந்து 2 குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் பரிதவித்து வருகின்றன.

1 More update

Next Story