சிறுமியை கடத்தி 25 நாட்களாக நடந்த கொடூரம்.. வாலிபரின் செயலால் அதிர்ச்சி


சிறுமியை கடத்தி 25 நாட்களாக நடந்த கொடூரம்..  வாலிபரின் செயலால் அதிர்ச்சி
x

சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த வாலிபர் இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்.

பல்லியா,

உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதம் 14-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் கடந்த 12-ந்தேதி அவரை கண்டுபிடித்த போலீசார், நடந்த நிகழ்வுகள் குறித்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பாபுராம் (வயது 21) என்பவர் சிறுமியை கடத்திச்சென்றதும், மராட்டியத்தின் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு சிறுமியை கொண்டு சென்றதும் தெரியவந்தது. சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த பாபுராம், தொடர்ந்து அவரை பலமுறை கற்பழித்துள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த தகவலை சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாபுராம் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக சிறுமியிடம் நடந்த விசாரணையின்போது, பாபுராம் தன்னை கடத்திச் சென்று மும்பை மற்றும் புனே உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

1 More update

Next Story