சட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க கூட்டணி


சட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க கூட்டணி
x
தினத்தந்தி 23 Nov 2024 10:29 AM IST (Updated: 23 Nov 2024 11:55 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.

மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல்: தற்போதைய முன்னிலை நிலவரம்:-

பா.ஜனதா கூட்டணி - 223

காங்கிரஸ் கூட்டணி - 55

பிற கட்சிகள் - 10

1 More update

Next Story