தம்பியுடன் வந்த 16 வயது சிறுமி.. வீட்டில் பத்திரமாக விடுவதாக கூறி கோர முகம் காட்டிய ஆட்டோ டிரைவர்


தம்பியுடன் வந்த 16 வயது சிறுமி.. வீட்டில் பத்திரமாக விடுவதாக கூறி கோர முகம் காட்டிய ஆட்டோ டிரைவர்
x

தம்பியுடன் பஸ் நிலையத்துக்கு வந்த 16 வயது சிறுமியை வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக கூறி ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார்.

தாவணகெரே,

கர்நாடக மாநிலம் தாவணகெரே(மாவட்டம்) டவுன் பஸ் நிலையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, தனது தம்பியுடன் வந்தாள். அவள், தனது தம்பியுடன் அங்கு பஸ்சுக்காக காத்து நின்றாள். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், தான் வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக கூறி சிறுமியை அழைத்துள்ளார். அதன்பேரில் சிறுமி, தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும், அந்த ஆட்டோவில் இன்னொருவரும் ஏறிக்கொண்டார். அவர் தனது நண்பர் என்று சிறுமியிடம் ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்றதும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அதற்கு சிறுமி மறுக்கவே இருவரும் சேர்ந்து சிறுமியை தாக்கி உள்ளனர். மேலும் அவளது தம்பியையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கினான். அதையடுத்து அவனை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, சிறுமியை ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அவர்கள் சிறுமியிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தம்பியை மீட்டுக் கொண்டு அங்கிருந்து மீண்டும் தாவணகெரே டவுனில் உள்ள அரசு பஸ் நிலையத்துக்கு வந்தார்.

அதையடுத்து அங்கிருந்த சில வியாபாரிகளின் உதவியுடன் அவள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தாள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

1 More update

Next Story