மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மும்பை,

கோவாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் இமெயில் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. இது குறித்த தவலின்பேரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு படையினர் மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

அப்போது இரவு 10.30 மணி அளவில் மும்பையில் அந்த விமானம் தரைஇறங்கியது. பாதுகாப்பு கருதி அந்த விமானம் தனித்து விடப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சோதனை நடத்திய பின்னர் விமானத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story