மோந்தா புயல்: ஆந்திராவில் 65 ரெயில்கள் ரத்து

வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது.
மோந்தா புயல்: ஆந்திராவில் 65 ரெயில்கள் ரத்து
Published on

அமராவதி,

வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அம்மாநிலத்தில் 65 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என மொத்தம் 65 ரெயில்கள் நாளை வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்ந்து பின்னர் ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புயல் காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களும் விமான சேவையை நிறுத்தியுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com