புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு


புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு
x
தினத்தந்தி 30 Oct 2025 7:01 PM IST (Updated: 30 Oct 2025 7:01 PM IST)
t-max-icont-min-icon

வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் வைகை இல்ல கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, புதுடெல்லி, சாணக்யபுரி, கவுடில்யமார்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (30.10.2025), பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசின் புதுடெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளர் ஆசிஷ்குமார், முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) எஸ்.மணிகண்டன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story