திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து பெண்களின் தாலி, தங்க செயின்களை திருடி வந்த மராட்டியத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 87 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






