ஆசையை நிறைவேற்றாத கணவரை மிளகாய் பொடி தூவி துடிக்க துடிக்க கொன்ற மனைவி


ஆசையை நிறைவேற்றாத கணவரை மிளகாய் பொடி தூவி துடிக்க துடிக்க கொன்ற மனைவி
x
தினத்தந்தி 1 Sept 2025 3:57 PM IST (Updated: 1 Sept 2025 4:14 PM IST)
t-max-icont-min-icon

குமார் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து அவரது கழுத்தை சுற்றி இறுக்கினார்.

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38) இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேணுகா (வயது 32) நேற்று விடுமுறை என்பதால் குமார் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி புதியதாக சேலை வாங்கி தரும்படி ஆசையாய் கணவரிடம் கேட்டு அடம் பிடித்துள்ளார். சேலை என்றால் ரேணுகாவிற்கு கொள்ளை பிரியமாம். அதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குமார் தனது மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கோபத்தின் உச்சிக்கே சென்றார். உடனே வீட்டு சமயலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசினார்.

என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து கணவரின் கழுத்தை சுற்றி இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கணவரை கொலை செய்துவிட்டதாக கதறி அழுதுள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசையாய் கேட்டு சேலை வாங்கி தராததால் கணவனை, மனைவி துடிதுடிக்க கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story