எனக்கு வாய்ப்பு அளித்தால் அரசமைப்பை காக்க முழு மூச்சோடு போராடுவேன்: சுதர்சன் ரெட்டி


எனக்கு வாய்ப்பு அளித்தால் அரசமைப்பை காக்க முழு மூச்சோடு போராடுவேன்: சுதர்சன் ரெட்டி
x

மாநில உரிமைக்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார் என்று சுதர்சன் ரெட்டி கூறினார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயககூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இருகூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னைக்கு வந்த சுதர்சன் ரெட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளுக்கு எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்வி, சுகாதாரத்தில் தமிழ்நாடு முன்னணியாக உள்ளது. மாநில உரிமைக்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். நான் நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். தற்போது நீங்கள் எனக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். எனக்கு வாய்ப்பளித்தால் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழு மூச்சோடு போராடுவேன்” என்று பேசினார்.

1 More update

Next Story