பிரேக் பழுதால் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி


பிரேக் பழுதால் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி
x

தறிகெட்டு ஓடிய லாரி 5 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் லோனாவாலா பகுதி போர் காட் மலைப்பகுதியில் பழைய மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. பேட்டரி ஹில் மலைப்பகுதி சரிவில் லாரி இறங்கிய போது, திடீரென பிரேக் பழுந்தடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் லாரி அந்த வழியாக சென்ற 3 கார், ஆட்டோ மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த பயங்கர விபத்தில் புனேயை சேர்ந்த நிலேஷ் லாகத் மற்றும் அவரது மகள் ஷரவ்யா (வயது10) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து லோனாவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேக் பழுதானதால் தறிகெட்டு ஓடிய லாரி மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் புனேயில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story