வணிக வளாக மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


வணிக வளாக மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் சாஹர் (வயது 34). என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திய சாஹர் வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். திருமணமாகாத இருவருக்கு மனநல பிரச்சினைகளும் இருந்துள்ளன. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சாஹர் இன்று காலை பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். வணிக வளாகத்தின் 3வது மாடிக்கு சென்ற சாஹர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாஹர் உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சாஹரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

1 More update

Next Story