75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை


75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை
x

மும்பையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நேற்று பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழை காரணமாக மும்பையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழை பாதிப்புக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், மும்பையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வழக்கத்தை விட சுமார் 16 நாட்கள் முன்பாக மழைக்காலம் மும்பையில் தொடங்கி இருக்கிறது. 1950-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே பருவமழை தொடங்கி உள்ளது.

கடைசியாக 1956, 1962, 1971 ஆகிய ஆண்டுகளில் மே 29-ந்தேதி பருவமழை தொடங்கி இருந்தது. தற்போது அதற்கு முன்பாக மே 26-ந்தேதியே மழைக்காலம் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story