ராஜஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம்: பாகிஸ்தான் வீரர் பிடிபட்டதாக தகவல்


ராஜஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம்: பாகிஸ்தான் வீரர் பிடிபட்டதாக தகவல்
x
தினத்தந்தி 8 May 2025 6:57 PM (Updated: 8 May 2025 11:53 PM)
t-max-icont-min-icon

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது

ஜெய்ப்பூர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் விமானி பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story