பீகார் தேர்தல் தோல்வி: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி ஆலோசனை

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
பீகார் தேர்தல் தோல்வி: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி ஆலோசனை
Published on

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் கைப்பற்றியது. இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி பதவியேற்றார்.

அதேவேளை, ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த படுதோல்வி ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பீகார் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பீகார் காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பீகார் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com