ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்


ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்
x

ராகுல்காந்தி அடிக்கடி காணாமல் போவதாக பாஜக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ரகசியமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக பாஜக தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அவர் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமித் மால்வியா எக்ஸ் தள பதிவில்,

'ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்ததாகவும், இப்போது மீண்டும் அடையாளம் தெரியாத இடத்திற்கு வெளிநாடு சென்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கோரினார்.ஏன் அவர் அடிக்கடி காணாமல் போகிறார்? இவர் அடிக்கடி வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்துவது எது? என்றும் மால்வியா தனது பதிவில் கூறியுள்ளார்.

பாஜக தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில்,

ராகுல் காந்தி தனது மருமகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவதற்காக லண்டன் சென்றுள்ளதாகவும், விரைவில் தாயகம் திரும்புவார் என்றும் பதிவிட்டார். பிரியங்கா காந்தியின் மகளான மிராயா வத்ரா இங்கிலாந்தில் பட்டம் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story