பயங்கரவாதம் பாம்பு போன்றது... மீண்டும் தலை தூக்கினால்... - பிரதமர் மோடி எச்சரிக்கை


பயங்கரவாதம் பாம்பு போன்றது... மீண்டும் தலை தூக்கினால்... - பிரதமர் மோடி எச்சரிக்கை
x

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்

பாட்னா,

பீகார் மாநிலம் காரகட் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவு பெற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில், சாலை , அனல்மின் நிலைய கட்டுமான பணிகளும் அடக்கம்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நமது சகோதரிகள் அவர்களின் கணவர்களை இழந்த பஹல்காம் தாக்குதல் நடந்த மறுநாள் நான் பீகாருக்கு வந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் கனவிலும் நினைக்காத தண்டனையை வழங்குவேன் என்று நான் உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை நிறைவேற்றியப்பின் நான் இன்று பீகாருக்கு வந்துள்ளேன்.

நமது சகோதரிகள் திருமணமானப்பின் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' வலிமையை பாகிஸ்தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஆனால், அவர்களை காலடியில் விழ வைத்தோம்.

பாகிஸ்தான் விமானப்படைத்தளங்கள், ராணுவ கட்டமைப்புகளை நாம் அழித்தோம். இது புதிய இந்தியா. இதன் சக்தி அனைவரும் காணும்படி உள்ளது. பயங்கரவாதம் பாம்பு போன்றது. பயங்கரவாதம் அதன் பொந்தில் இருந்து மீண்டும் தலைதூக்க நினைத்தால் அது தோண்டி எடுக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவிடம் உள்ள அம்புக்கூடையில் இருந்து வந்த ஒரே ஒரு அம்புதான். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்றார்

1 More update

Next Story