

புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே பலதடவை கூறியுள்ளார். நேற்று முன்தினம், சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடனான சந்திப்பின்போதும், அதை அவர் தெரிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக இதுவரை டிரம்ப் 60 முறை கூறி விட்டார் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.