உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்


உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்
x

திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

அம்ரோஹா,

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷப்னம் (வயது 30). 3 குழந்தைகளின் தாய். மீரட் நகரில் ஒருவரை திருமணம் செய்த ஷப்னம் பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதன்பின்னர், சைதன்வாலி கிராமத்தில் வசித்த தவுபீக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2011-ம் ஆண்டு நடந்த விபத்தில் தவுபீக்குக்கு உடலில் ஊனம் ஏற்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 2 படிக்கும் சிவா என்ற 18 வயது வாலிபருடன் ஷப்னமுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் தவுபீக்கிடம் இருந்து விவாகரத்து கோரி, கடந்த வாரம் அதனை வாங்கியும் விட்டார். இதன்பின்னர், இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என பெயர் மாற்றி கொண்ட ஷப்னம், சிவாவை 3-வது கணவராக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த ஜோடி மகிழ்ச்சியாக இருந்தால், எங்களுடைய குடும்பமும் மகிழ்ச்சியடையும் என கூறினார். அவர்கள் இருவரும் ஒன்றாக அமைதியான முறையில் வாழ்வார்கள் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.

1 More update

Next Story