உத்தர பிரதேசம்: 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

உத்தர பிரதேசத்தில் பெற்றோர் வீட்டுக்கு மனைவி சென்றபோது, 11 வயது மகளை அவருடைய கணவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
மகராஜ்கஞ்ச்,
உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் நகரில் வசித்து வரும் நபர் மனைவி இல்லாதபோது, மகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கொத்வாலி காவல் நிலைய அதிகாரி சத்யேந்திர குமார் ராய் கூறும்போது, பெற்றோர் வீட்டுக்கு அந்த நபரின் மனைவி சென்றபோது, 11 வயது மகளை அவருடைய கணவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதுபற்றி அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் விஷம் கொடுத்து கொலை செய்து விடுவேன் என கூறி மகளை மிரட்டியிருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் அந்நபரை போலீசார் கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டாள் என ராய் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






