3 மோட்டார் சைக்கிள் திருட்டு

மூலக்குளம் அருகே 3 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
மூலக்குளம்
சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது37). கூலி தொழிலாளி. இவரது உறவினருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வி.பி.சிங் நகர் பகுதியில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்று விட்டார்.
லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் (32), தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு முத்தியால்பேட்டை காந்திவீதியில் உள்ள கடைக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்தி இருந்ததால் மர்மநபர் யாரோ திருடிச் சென்றுவிட்டார்.
இதேபோல் காலாப்பட்டை சேர்ந்த நரேஷ்குமார் (25) என்பவர் ரோமன்ரோலண்ட் வீதியில் தனியார் நிறுவனம் முன்பு நிறுத்தியிருந்தமோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம், முத்தியால்பேட்டை, பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.