தம்பதி உள்பட 5 பேர் அதிரடி கைது


தம்பதி உள்பட 5 பேர் அதிரடி கைது
x

அரியாங்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட தம்பதி உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 2 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட தம்பதி உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 2 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.

அடுக்குமாடி வீட்டில் விபசாரம்

அரியாங்குப்பம் புறவழி சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஒரு வீட்டை வாடகை எடுத்து விபசாரம் நடப்பதாக அதிரடி குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் உத்தரவின் பேரில், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், அதிரடி குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிச்சாமி மற்றும் பெண் போலீசாரும் விரைந்தனர். அப்போது, அந்த வீட்டில், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தம்பதி உள்பட 5 பேர் கைது

விசாரணையில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (வயது 39), அவரது மனைவி தாட்சாயிணி (35), முதலியார்பேட்டையை சேர்ந்த பிரமிளா (48), கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஜெயா என்ற தனம் (50), அரும்பார்த்தபுரம் சச்சிதானந்தம் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 6 செல்போன்களும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் விபசார கும்பல் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story