தொழில் அதிபரிடம் இரவல் வாங்கிய காரை,விற்பனை செய்து மோசடி


தொழில் அதிபரிடம் இரவல் வாங்கிய காரை,விற்பனை செய்து மோசடி
x

முதலியார்பேட்டையில் தொழிலதிபர் காரை இரவல் வாங்கி விற்று மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை

முதலியார்பேட்டையில் தொழிலதிபர் காரை இரவல் வாங்கி விற்று மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோசடி

புதுச்சேரி முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 47) தொழிலதிபர். இவரது சொகுசு காரை செலியமேட்டை சேர்ந்த செல்வமூர்த்தி இரவலுக்கு வாங்கி, முதலியார்பேட்டை ஜான்சி நகரை சேர்ந்த வைத்திலிங்க ரெட்டியார் என்பவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த காரை ராமமூர்த்தியிடம் திருப்பி கொடுக்கவில்லை. காரின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். எனவே செல்வமூர்த்தி, வைத்திலிங்க ரெட்டியார் ஆகிய இருவரிடம் ராமமூர்த்தி பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதற்கிடையே அந்த காரை அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். தற்போது கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (49) என்பவர் அந்த காரை வைத்து ஓட்டி வருவதும் தெரியவந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராமமூர்த்தி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

வலைவீச்சு

புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் 2 பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்து செல்வமூர்த்தி, வைத்திலிங்க ரெட்டியார், ஜெயலட்சுமி, வெங்கடேச பெருமாள் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story