சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்


சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்
x

பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் பகுதியில் நீண்ட மணல் பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரை பகுதியில் வீரன் கோவில் எதிரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணாவுக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டது.

இந்தநிலையில் அந்த பகுதியில் கலையரங்கம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டதால் அங்குள்ள 2 சிலைகள் அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டன. ஆனால் அதனை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கடற்கரைக்கு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பலர் வந்து செல்கின்றனர். இருப்பினும் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை. சேதமடைந்த சிலைகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story