இன்னொரு பெண்ணுடன் பேசியதை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்


இன்னொரு பெண்ணுடன் பேசியதை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்
x

மூலக்குளம் அருகே இன்னொரு பெண்ணுடன் பேசியதை தட்டிக்கேட்ட மனைவி தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்..

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். திருமணமாகி விவாகரத்தான இவர், 2-வதாக வினோதினி (30) என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுரேஷ் அடிக்கடி செல்போனில் வேறொரு பெண்ணிடம் பேசியதாக தெரிகிறது. இதனை வினோதினி தட்டிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டு, கோபித்து கொண்டு அனுமந்தையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் சுரேஷ் செல்போனில் வேறொரு பெண்ணிடம் பேசி உள்ளார். இதனை வினோதினி தட்டிக் கேட்டபோது இரும்பு குழாயால் பலமாகி தாக்கியதுடன், கையால் கன்னத்தில் அறைந்தார். இதில் பலத்த காயமடைந்த வினோதினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story