செல்போன் திருடியவர் கைது


செல்போன் திருடியவர் கைது
x

காலாப்பட்டு அருகே செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு

சேதராப்பட்டு, துத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றன. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிணந்தா மண்டல் (வயது 33) என்பவர் சேதராபட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இன்று வேலையை முடித்துவிட்டு வீட்டில் கதவை திறந்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி சென்று விட்டான்.

இதுபோல மற்றொரு வீட்டில் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்தபோது பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சேதராப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். கைதானவர் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் புது காலனி சேர்ந்த அசோக் ஆவார். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story