என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி


என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி
x

புதுச்சேரியில் என்ஜினீயரிடம் ரூ.38¼ லட்சம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

புதுச்சேரியில் என்ஜினீயரிடம் ரூ.38¼ லட்சம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடரும் மோசடி

புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு செய்து ஏராளமானோர் தங்களின் பணத்தை இழந்து வருகிறார்கள். அதன்படி நேற்று ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் என எண்ணி லாஸ்பேட்டையை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சசிதரன் என்பவர் ரூ.7¾ லட்சம் இழந்தார்.

இதேபோல் புதுவையை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரும் ரூ.38 லட்சத்தை இழந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ரூ.38 லட்சம் மோசடி

புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த செய்யது சலாம் (வயது36). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்ட ரேட்டிங் பணிகளை முடித்ததற்காக அவரது வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

மேலும் டெலிகிராமில் ஆன்லைனில் முதலீடு செய்தால் 30 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய செய்யது சலாம் 39 தவணைகளாக ரூ.38 லட்சத்து 36 ஆயிரத்து 994 முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு சொன்னபடி பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----


Next Story