மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து


மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து
x

கருக்கன்குடி, வளத்தாமங்கலம் வழியாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

காரைக்கால்,

கருக்கன்குடி, வளத்தாமங்கலம் வழியாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசு பஸ் நிறுத்தம்

காரைக்கால் பஸ் நிலையத்தில் இருந்து திருநள்ளாறு, சுரக்குடி, கருக்கன்குடி, வளத்தாமங்கலம், நல்லம்பல், அம்பகரத்தூர், பேரளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கும்பகோணம் வரை தமிழக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் குலோத்துங்கனிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதன் பயனாக மேற்கண்ட கிராமங்கள் வழியாக மீண்டும் பஸ் இயக்க தமிழக போக்குவரத்துத்துறை ஒப்புதல் வழங்கியது.

4 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கம்

இதைத்தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் அந்த வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கருக்கன்குடி கிராமத்தில் நடந்தது.

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், செயலாளர் பக்கிரிசாமி, போக்குவரத்து அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story