மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மூலக்குளம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்குளம்

காரைக்கால் பாரதியார் ரோடு கீழக்காசாக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 26). இவர் புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடி அய்யனார் கோவில் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தான் பணிபுரியும் ஓட்டலின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓட்டலின் மாடியில் தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story