மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம்


மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம்
x

புதுவையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி

தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணைய உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, நுகர்வோர் புகார்களை குறிப்பிட்ட காலநேரத்தில் செயல் முனைப்போடு கையாளப்பட்டு தீர்வு காண வேண்டுமென்று ஒரு நாடு தழுவிய அமைப்பு மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் தேங்கிவரும் புகார்களை குறிப்பிட்ட காலத்தில் தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் மக்கள் நீதிமன்ற அமர்வு நடந்தது.

புதுவை மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் ஆறுமுகம், கவிதா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமர்வில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரூ.16 லட்சம் நிவாரணம்

அதில் 14 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 94 ஆயிரம் நுகர்வோர்களுக்கு நிவாரணமாக வழங்கி தீர்வு காணப்பட்டது.

இதில் புதுவை வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் கதிர்வேல், நுகர்வோர் குறைதீர்வு ஆணைய பதிவாளர் குணசேகர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story