மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு


மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
x

திருபுவனை அருகே மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.

திருபுவனை

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (வயது 28). இவர், மதகடிப்பட்டில் உள்ள மதுக்கடையில் மதுகுடித்து விட்டு போதையில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சிறிய பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது கால் இடறி வாய்க்காலில் தடுமாறி விழுந்தார். அங்கு தேங்கி இருந்த சாக்கடை நீரில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று சாக்கடை கால்வாயில் இருந்து வாலிபரை போராடி மீட்டனர். பின்னர் அவரை குளிப்பாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் விட்டு விட்டு சென்றனர்.மதுபோதையில் மதகடிப்பட்டில் அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடப்பதால் அப்பகுதி கடைக்காரர்கள் யார் இன்று சாக்கடை கால்வாயில் விழுவார்கள், என்ற எதிர்பார்ப்போடும், பயத்தோடும் இருக்கிறார்கள். எனவே, தற்காலிக சிறிய பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.


Next Story