அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்


அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்
x

ஜிப்மர்ஆஸ்பத்திரி சார்பில் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மாதத்தின் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி ஜிப்மர்ஆஸ்பத்திரி சார்பில் எதிர்ப்பியல் மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை புரிந்து பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story