4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது


4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
x

மூலக்குளத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

புதுவை பூமியான்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 60). இவரது வீட்டருகே இன்று இரவு வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைத்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பால்ராஜ் மற்றும் அவர்களது உறவினர்களான சுப்புராயன் (55), ரங்கநாதன் (50) வேலவன் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் 4 பேரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை வெட்டியது பூமியான் பேட்டை சேர்ந்த வருண், சர்வீன், சஞ்சய், தீபக் என்பது தெரியவந்தது. இதில் வருணை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story