மூச்சுத் திணறலால் பெண் சாவு


மூச்சுத் திணறலால் பெண் சாவு
x

திருநள்ளாறு அருகே மூச்சுத் திணறலால் பெண் உயிரிழந்தார்.

திருநள்ளாறு

திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகையைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் காரைக்கால் மேலஓடுதுறையில் உள்ள நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 வயதில் சுபேதா என்ற குழந்தை உள்ளது. நீண்டகாலமாக நுரையீரல் கோளாறால் புவனேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று புவனேஸ்வரிக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story