314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 11 July 2024 4:20 AM GMT (Updated: 11 July 2024 4:27 AM GMT)

அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை,

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன் மற்றும் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story