ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி


ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 10 Aug 2024 1:03 PM GMT (Updated: 10 Aug 2024 2:38 PM GMT)

முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

கோவை,

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது யுபிஎஸ்சி தேர்வர்களுடன் அவர் கலந்துரையாடியதாவது;

"இளைஞர்கள் உடன் கலந்து உரையாடும் போது உற்சாகமாக உள்ளது. அதுவும் இப்படி சாதனை புரிந்துள்ள இந்த இளைஞர்கள் உடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். முடிவுகளை பற்றி கவலை கொள்ள கூடாது. முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மக்கள் பணியாளர்கள் பிணிகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் அறிவு சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்க வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நிதி மேலாண்மையை நீங்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. வாழ்க்கை மாரத்தான் அல்ல. நானும் பலருடன் ஓடுகிறேன் என்பது போல எந்த துறை சென்றாலும் நேர மேலாண்மை ஒவ்வொரு நாளும் அவசியம்"

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story