ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு


ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
x

கோப்புப்படம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்,

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story