திருப்பூர்: செல்போன் அதிகநேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை


திருப்பூர்: செல்போன் அதிகநேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
x

AI generated image 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சித்தார்த் அப்பகுதியில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்தான். இதனிடையே, சிறுவன் சித்தார்த் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளான். குறிப்பாக சில கேம்களை செல்போனில் விளையாடியுள்ளான். செல்போனை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம் என்று சித்தார்த்தின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கம்போல இன்றும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவன் சித்தார்த் மீண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கேம் விளையாடியுள்ளான். இதனால், செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளான். இதனால் சித்தார்த் வீட்டில் உள்ள அறையில் மயங்கி விழுந்துள்ளானர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சித்தார்த்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திதனர். அங்கு சித்தார்த்தை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story