கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 2 வாலிபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், தருவையை சேர்ந்த தளவாய்(எ) முருகன் மகன் முத்து (வயது 24) மற்றும் செல்லகண்ணு மகன் மந்திரி(எ) ராஜ்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கவனத்திற்கு வந்ததது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com