புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள் விற்ற 3 பேர் கைது

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு சென்னையில் களை கட்டியது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மயிலாப்பூர் பகுதியில் போதைப்பொருளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மயிலாப்பூர் பகுதியை சேர்ந் ஹரிஷ், வசந்தராமன், சாய்சரண் என்பதும் புத்தாண்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்வதற்கு பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போதை ஸ்டாம்ப் மற்றும் பில்மெத் என்ற போதை பொருள் மற்றும் உயர்ரக கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






