கொலை முயற்சி வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 131 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Published on

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் மகன் திரவியராஜ்(எ) ராஜுபாய் (வயது 26) மற்றும் சுப்பையா மகன் அருண்குமார்(23) ஆகிய 2 பேரும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 26.10.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரசாக்(எ) அபுபக்கர் மகன் சதாம்உசேன்(எ) சிலிண்டர்(35) என்பவர் கடந்த 26.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

மேற்சொன்ன 3 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (23.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 131 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com