தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு

காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.இதன்படி 31 ஆயிரத்து 373 தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், இன்று முதல் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவங்கி வைக்கப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் இந்த உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்ப்பட உள்ளது. காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மீதம் உள்ள 24 மாநகராட்சிகள் மற்றும் 145 நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் உணவுத்திட்டம் வருகிற 6-ந் தேதி முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.






