தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, முத்தையாபுரம், மதிகட்டான் ஓடை அருகே கடந்த 7.5.2025 அன்று முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (வயது 43) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான குருவித்துறை பகுதியை சேர்ந்தவர்களான மாசாணமுத்து மகன் புலமாடமுத்து(32), சங்கர் மகன் ஜெயராஜ்(21) மற்றும் மாரிமுத்து மகன் நாகராஜன்(19) ஆகிய 3 பேரையும், மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (6.6.2025) முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story