ராமேசுவரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேசுவரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக ரெயில்களில் தற்காலிகமாக அவ்வப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16618/16617) வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.
அதேபோல, வடகிழக்கு ரெயில்வே மண்டலத்தின் சார்பில் இயக்கப்படும் பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.22536/22535) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி நிரந்தரமாக இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகின்றன.
அதன்படி இந்த ரெயிலில், ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு எகனாமி வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டியுடன் கூடிய 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






