'பா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது' - திருமாவளவன் விமர்சனம்


பா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது - திருமாவளவன் விமர்சனம்
x

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி வடிவத்தைக் கூட இன்னும் பெறவில்லை என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி என்ற அடிப்படையில், மு.க.ஸ்டாலின் வகுக்கும் செயல்திட்டங்களை செயல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துழைப்பு வழங்கும்.

தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக ஒரு கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகவில்லை. அமித்ஷா அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வருகிறார், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். இதுவரை அ.தி.மு.க. மட்டுமே பா.ஜ.க. வலையில் சிக்கியுள்ளது. வேறு எந்த கட்சியும் உடன்படவில்லை.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி வடிவத்தைக் கூட இன்னும் பெறவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டுமே ஒரு கூட்டணியாக, வலுவாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து கூட்டணியின் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story